53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
51 வயது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலி.!
சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மனைவியை இழந்த இவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் சுப்பையாவுக்கு அதே பகுதியை சேர்ந்த 46 வயது செல்வி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று செல்வியின் வீட்டில் இருந்த சுப்பையா திடீரென இறந்து விட்டதாக அவர் மகளுக்கு செல்வி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மகளுக்கு சந்தேகம் ஏற்படவே சுப்பையாவின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் சுப்பையாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வெளியான பிரேத பரிசோதனை பரிசோதனை அறிக்கையில் சுப்பையா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது.
இதில், செல்வியே கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து செல்வியிடம் மேற்கொண்ட விசாரணையில் சுப்பையா அடிக்கடி குடித்துவிட்டு தொந்தரவு செய்ததால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.