பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குளத்தில் தவறிவிழுந்த குழந்தைகள்.. காப்பாற்றிய சிங்கப்பெண்.. குவியும் பாராட்டுக்கள்..!
கால்தவறி குளத்தில் விழுந்த 2 குழந்தைகளை காப்பாற்றிய சிங்கப்பெண்ணை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் பகுதியில் உள்ள குளத்தின் கரையில், அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கால்வழுக்கி குளத்தில் ஒருவர் பின், மற்றொருவர் என இருவரும் விழுந்துள்ளனர். இதனை கண்ட எழிலரசி என்ற பெண் குழந்தைகள் தண்ணீரில் மூழ்குவது பார்த்து, உடனடியாக தண்ணீரில் இறங்கி இரண்டு குழந்தைகளையும் பிடித்துள்ளார்.
ஆனால், சிமெண்ட் சுவற்றில் ஏற முடியாமல் நீண்ட நேரமாக இருவரையும் கையில் பிடித்தபடியே உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
தொடர்ந்து தண்ணீர் ஆழமாக இருந்ததால் யாரும் உதவி செய்ய முடியாத நிலையில், இது குறித்த தகவல் குழந்தைகளின் தந்தைக்கு தெரியவர அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தைகளையும், எழிலரசியையும் காப்பாற்றியுள்ளார்.
மேலும், தனது உயிருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என நினைத்து இறுதி வரை குழந்தைகளை கையில் பிடித்தபடியிருந்த எழிலரசியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.