மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்ப்பமாக்கிவிட்டு டிமிக்கி கொடுத்த காதலன்..! கட்டிய லுங்கியுடன் காதலனை தாலி கட்ட வைத்த காதலி.! தரமான சம்பவம்.!
காதலித்து ஏமாற்ற நினைத்த காதலனுக்கு அவரது காதலி அவரின் காதலனை கட்டிய லுங்கியுடன் தாலி கட்ட வைத்து தக்க பாடத்தைக் கற்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னாத்து குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுகுனா என்ற பெண்ணும், அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சையை சேர்ந்த மணி்வேல் என்பவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இவர்கள் இருவருக்கும் வேலை பறிபோனதால், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதால், சுகுணா கர்ப்பம் ஆகியுள்ளார். இதனால் அவர் உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மணிவேலை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், மணிவேலோ சொத்திற்கு ஆசைப்பட்டு, தன்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்று வந்துள்ளார். இதனையறிந்த அதிர்ச்சியடைந்த சுகுணா உடனடியாக விருத்தாச்சலம் காவல்நிலையத்தில், நடந்தவற்றை கூறி தன்னுடைய காதலனுடன் சேர்த்து வைக்கும் படி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கட்டியிருந்த லுங்கியுடன் மணிவேலை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சுகுணாவை திருமண்ம செய்து கொள்ளவில்லை என்றால், நிச்சயம் சிறைக்கு தான் நீ செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து மணிவேல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்த அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.