மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்தோ பரிதாபம்.. வகுப்பறையில் டமால்., டுமீல்..! பதறியடித்து ஓடிய ஆசியர்கள்..!
அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு சூழல் நிலவியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் அருகே திருநள்ளாறு பகுதியில் தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் பள்ளி கட்டிடத்தில் தட்டச்சுபயிற்சி வகுப்பறை மற்றும் மற்றொரு வகுப்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் வகுப்பறையில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தட்டச்சு இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இடிந்து விழுந்த மேற்கூரை பகுதிகளை அதிகாரிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.