மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக முதல்வருக்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் எழுதிய பரபரப்பு கடிதம்.!
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் முதலமைச்சரை சந்தித்து நன்றி கூறினார்கள்.
அரசுப்பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் பயில ஏதுவாக, 7.5% உள்ஒதுக்கீடு வழங்கியமைக்காக இன்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணாக்கர்கள் நேரில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து, நன்றிமடல் வழங்கினர். pic.twitter.com/uJIwco8SIV
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 17, 2020
அதில், சா.ரதிவாணன் என்ற மாணவர் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அந்த கடிதத்தில்,
"எந்தைத் தாயின் மருத்துவக் கனவெல்லாம் களையாது காத்திட்ட கருணை மறவோரே, 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டைத் தந்தெமை காத்தீர்....
அரியலூரில் எமை அறிந்திடுவார் யாருமில்லை. அது அன்றொருநாள்....
அறியாத பலருக்கும் அரியவராய் உள்ளோமையா! உங்களின் அரும்பெரும் செய்கையினார். இது இன்றையநாள்....
எமக்கெல்லாம் முகவரி தந்திட்ட மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே
அழியாது உமது பெயர் என்றென்றும் எங்கள் மனமெனும் அவைதனிலே....
ஆனந்தக் கடலினிலே குளிக்க வைத்து, அழகு பார்த்த வாழும் கர்மவீரரே....
நோயெனும் அரக்கன் துளிகூட நுழையாது, தமிழகத்தைக் காத்திடவே யாமுள்ளோம் மறவாதீர்....
கனவை நினைவாக்கிய தமிழக முதலமைச்சருக்கு எங்களது நன்றி என்னும் மலர்களை தங்களது காலடியில் சமர்ப்பிக்கின்றோம்." என்று அந்த கடிதத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவன் சா.ரதிவாணன் எழுதியிருந்தார்.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருந்து, ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவராகி சேவை செய்வேன் என கூறியுள்ளார்.