மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்களே வளர்த்து இப்ப நீங்களே இப்படி சீரழிச்சிட்டிங்களே தாத்தா... கதறும் 13 வயது சிறுமி!!
சென்னையில் தாத்தாவின் வளர்ப்பில் வளர்ந்து வந்த 13 வயது சிறுமியை தாத்தா, சிறுமியின் 3 சித்தப்பாக்கள், 2 அண்ணன்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னையை சேர்ந்த தம்பதியினர் தங்களது 13 வயது சிறுமியை விட்டு விட்டு சென்றுள்ளனர். அதனையடுத்து அந்த சிறுமியை அவரின் தாத்தா வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி தாத்தாவின் குடும்பத்தினர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தான் பயிலும் பள்ளி நிர்வாகத்திடம் கூறி அழுதுள்ளார்.
அதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கவே போலீசார் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த சிறுமியின் தாத்தா, மூன்று சித்தப்பாக்கள், 2 அண்ணன்கள் என்று ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவ்வழக்கை விசாரித்த நீதிபதி கைதான சிறுமியின் தாத்தாவுக்கும் மூன்று சித்தப்பாக்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இரண்டு சகோதரர்களுக்கும் 10 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.