திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Group 4 Exam: குரூப் 4 தேர்வுகள் விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி அதிரடி விளக்கம்..!
கடந்த ஜூலை 24, 2022ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 இலட்சம் தேர்வர்கள் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில், தமிழ் தேர்வில் ஐந்து லட்சம் பேர் தோல்வியடைந்ததாகவும், பலருக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்றும் அடுத்தடுத்த பல சர்ச்சைகள் எழுந்தன.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, "தமிழில் தேர்ச்சி பெறாத பலரின் பொது அறிவு விடைத்தாள் தற்போது வரை திருத்தப்படவில்லை. இதனால் பலருக்கும் முடிவுகள் வெளியாகவில்லை" என்று தெரிவித்துள்ளது.