மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 வாலிபர்கள்...பொறிவைத்து பிடித்த போலீசார்!...
வேலூர் அருகே சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களுரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நேற்று இரவு காவல்துறையினர் அங்குள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த வேனை நிறுத்தும்படி காவல்துறையினர் சைகை காண்பித்துள்ளனர்.ஆனால், காவல்துறையினரை கண்டதும் வேனில் இருந்த டிரைவர் வேனை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்து வேனில் இருந்தவர்களை கைது செய்தனர். அப்போது வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த 22 வயதான சக்திவேல், செட்டி பள்ளியை சேர்ந்த 24 வயதான வேல்முருகன் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குட்கா கடத்துவதற்காக அவர்களை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் தமிழ்நாட்டில் குட்கா மற்றும் கஞ்சா போன்றவற்றை கடத்தி வருபவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.