பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கிய மழை இரவு முழுவதும் விடாமல் பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலையும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.