#Breaking: வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பலத்த தரைக்காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! 



Heavy Wind on Today and Tomorrow 29 Nov 2024 

சென்னை, கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே, நாளை (30 நவ 2024) பிற்பகலில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடகடலோர, அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று பலத்த தரைக்காற்று

இந்நிலையில், வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசும். சென்னை, கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், அதிகபட்ஷமாக இன்று மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசலாம். 

இதையும் படிங்க: சற்றுமுன்: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை 12 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.!

rain

நாளை சூறைக்காற்று

அதேநேரத்தில் நாளை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 90 கிமீ வேகத்தில் வீசலாம். இது சூறாவளிக்காற்றாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால், கடலோரத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கே 340 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 290 கிமீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு, மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: #Breaking: மக்களே ரெடியா? வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!