ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#Breaking: மக்களே ரெடியா? வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வலுவிழந்ததாக கணிக்கப்பட்ட ஃபெங்கல் புயல், மீண்டும் வலுப்பெற்று சென்னை நோக்கி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று தமிழகத்தில் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வங்கக்கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றுப்பிரிதல் எனப்படும் இயற்கையான நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் மூலமாக வலுப்பெற இயலவில்லை.
இதையும் படிங்க: ஏரி ஆக்கிரமிப்பு வீடை அதிகாரிகள் இடித்துவிடுவதாக அச்சம்; தொழிலாளி பயத்தில் தற்கொலை.!
இதனால் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகடலோர மாவட்டங்களில் அதிக மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 12 மணிநேரத்தில் புயல் உருவாகும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
புயலுக்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகம் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 400 கிமீ தொலைவிலும், நாகையில் இருந்து 300 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 3 மணிநேரத்திற்குள் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் 3 மணிநேரத்திற்கு பின் தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று முறிவு குறைந்ததால், கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல், மணிக்கு 90 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பார்சல் உணவில் கையுடன் வந்த சில்வர் கோட்டிங்., பசிக்கு உணவு வாங்கிய சாமானியனுக்கு பேரதிர்ச்சி.. சென்னை மக்களே கவனம்.!