நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குட் நியூஸ்...!!டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்த விவரம் இதோ..!!



Here is the TNPSC Exam Result Details..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு முடிவுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அரசுத் துறையில் அமைச்சுப் பணிகளில் உள்ளவர்கள் தலைமைச் செயலகப் பணிகளுக்கு செல்வதற்கு குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் உள்ள உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் உள்ள 161 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 5 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. 

இதைத் தொடர்ந்து அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவேற்ற செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. குரூப் 5ஏ தேர்வு எழுத 383 பெண்கள் உட்பட மொத்தம் 1, 114 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

குரூப் 5ஏவுக்கான எழுத்துத் தேர்வு சென்னையில் டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்வு நடந்து முடிந்து சுமார் 7 மாதங்கள் ஆன நிலையில், முடிவுகள் இன்னும் வெளியாகாததால் தேர்வு எழுதியவர்கள் அதத்தில் உள்ளனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில், குரூப் 5ஏ தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, மே மாதம் நடத்தி பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருப்பதால், தேர்வு எழுதி முடிவை எதிர்பார்த்து இருப்பவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.