மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கைக்குழந்தையை தவிக்கவிட்டு காதல் தம்பதியினர் தற்கொலை..!! நன்னிலம் பகுதியில் பரபரப்பு..!!
திருவாரூர் மாவட்டம், சோத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன். இவரது மகன் சுபாஷ் ( 25). இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் அஷ்டலட்சுமி (20). இவர்கள் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 1½ வருடம் முடிந்துள்ள நிலையில், இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சுபாஷ் கடந்த 20 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், சுபாஷ் தினந்தோறும் குடிபோதையில் அஷ்டலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக விரக்தியடைந்த அஷ்டலட்சுமி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக குழந்தை அழுது கொண்டிருந்த சத்தைத்த கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அஷ்டலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவது தெரிய வந்தது.
இதற்கிடையே, வீடு திரும்பிய சுபாஷ் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அருகில் உள்ள பருத்திக் கொல்லைக்கு சென்ற சுபாஷ் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவனும்-மனைவியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்தூறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கருத்து வேறுபாடு காரணமாக காதல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 3 மாத கைக்குழந்தை தவித்து வருகிறது. இந்த சம்பவம் சோத்தக்குடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.