#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை!!.. உலக வங்கி அறிவுறுத்தலின் பேரில் அரசு செயல்படும்: அமைச்சர் உறுதி..!
மாநகர் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் எண்ணம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை, மாநகர் போக்குவரத்து கழகத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் போக்குவரத்து கழக தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. அப்படி ஒரு பேச்சே எழவில்லை.
எனவே அரசு பேருந்து போக்குவரத்து கழக பணியாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. உலக வங்கி வழங்கிய ஆலோசனையின் பேரில், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை, ஒப்பந்த அடிப்படையில் மாநகர் போக்குவரத்து கழக வழித்தடங்களில் இயக்குவது குறித்து நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.
500 புதிய மின்சார பேருந்துகள் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் பேருந்துகளாக இயக்கப்படும். மகளிர்களுக்கு கட்டணமில்லா பயணம் தொடர்ந்து அமலில் இருக்கும். அரசு தனது கொள்கைகளில் உறுதியாக உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.