#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே!! கருத்தடை சாதனம் அகற்ற சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. கதறும் குடும்பத்தினர்..!
சென்னை மதுராந்தகம் சிலாவட்டம் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா. இவர் கருத்தடை சாதனத்தை அகற்ற மதுராந்தகத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற திவ்யாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கருத்தடை சாதனத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கருத்தடை சாதனத்தை அகற்றும் போது எதிர்பாராத விதமாக திவ்யா உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து திவ்யா உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திவ்யாவின் குடும்பத்தினர்கள் தனியார் மருத்துவமனையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திவ்யா உயிரிழந்ததை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்ததாக அவரது கணவர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திவ்யாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.