சென்னையை சுழட்டவிருக்கும் கஜா!. 24 மணிநேரத்தில் சூறாவளி!.



hurricane-in-chennai


வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது.  

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி கஜா புயலாக வலுபெற்று தற்போது இந்த புயல் சென்னையை நெருங்குகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் சென்னையிலிருந்து 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 990 கிமீ தொலைவில் இந்த புயல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

kaja puyal

தற்போது தீவிரமடையும் கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும். இதனால் 15 தேதி வட தமிழகத்தில் ஒரே நாளில் 20 செமீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வந்து பின் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த புயல் சென்னை மற்றும் நாகை இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.