அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
திருமணமான 20வது நாளிலேயே பிரிந்த மனைவி... பழிவாங்க கணவன் செய்த மோசமான செயல்.!
பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜமுருகன் என்பவருக்கும் மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
திருமணத்திற்கு பிறகு ராஜமுருகன், ரம்யாவை தினம் தினம் குடித்து விட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 20 வது நாளிலேயே கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார் ரம்யா.
இதனால் ஆத்திரமடைந்த ராஜமுருகன் மனைவியை பழிவாங்கியே ஆக வேண்டும் என நினைத்துள்ளார். அதன்படி மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, மனைவியின் பெற்றோர்களுக்கும் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி ரம்யா, கணவன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமறைவாகி இருந்த ராஜமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.