#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரியாணி கரண்டியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!
சென்னை அயனாவரம் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
அதேபோல் கடந்த மார்ச் 10ம் தேதி ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலால் நிலைகுலைந்த ரவிக்குமார் வீட்டில் இருந்த பிரியாணி கரண்டியை எடுத்து மனைவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். உடனடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.