மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கத்தியால் துண்டு துண்டாக வெட்டிய கொடூர கணவன்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாடார் தெரு வசித்து வருபவர் அரபு அலி. இவர் வேடசந்தூரில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த தம்பதியினருக்கு தற்போது நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரபு அலிக்கு தனது மனைவி ஜாஸ்மின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அரபு அலி வீட்டிற்கு வந்தபோது ஜோதிலட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அரபு அலியை கண்டதும் போனை கட் செய்துள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் அரபு அலி விசாரித்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அரபு அலி கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் ஜோதிலட்சுமியின் தலை கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக விட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதிலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனையடுத்து அரபு அலியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த மனைவியை நடத்தை சந்தேகத்தால் கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.