#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதுபோதையில் தகராறு.. மனைவியை அடித்து கொன்ற கணவன்!
புதுக்கோட்டை அருகே மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வணக்கண்காட்டை சேர்ந்தவர் ரங்கசாமி - ஜீவிதா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் மதுபோதைக்கு அடிமையான ரங்கசாமி தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரங்கசாமி கட்டையால் தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஜீவிதாவை அருகில் இருந்தவர்கள் வீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடக்காடு போலீசார் ரங்கசாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.