மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த கொடூர சம்பவம்... போலீசார் விசாரணை!!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் - அனிதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. வெங்கடேசன் அதே பகுதியில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வெங்கடேசன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் அனிதா தனது தாய் வீட்டிற்கு குழந்தையை அழைத்து கொண்டு சென்றுள்ளார். பின்னர் வெங்கடேசன் சமாதானம் செய்து அனிதாவை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்தது மட்டுமின்றி ஆத்திரத்தில் அனிதாவின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.