மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பப்பா என்னா பசி.. இட்லி பொட்டலத்தை பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக முருகேசன் என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனையடுத்து நேற்று காலை முருகேசனுக்கு டிபன் வாங்க அவரது உறவினர் மருத்துவமனைக்கு அருகில் இருந்த தனியார் உணவகத்திற்கு சென்று 4 இட்லிகளை வாங்கி வந்துள்ளார்.
அதனை பசியாக இருந்த முருகேசனிடம் கொடுத்துள்ளார். முருகேசனும் சாப்பிடுவதற்காக இட்லி பொட்டலத்தை பிரித்துள்ளார். அப்போது இட்லி ஒன்றில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உணவக உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இட்லிக்கு உரிய பணம் அவரிடம் திரும்ப தரப்பட்டதுடன் இட்லி மாவையும் கீழே கொட்டிவிட்டு கடையை மூடிவிட்டு உரிமையாளர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.