#Breaking: "அண்ணே அவர் என்ன அடிச்சிட்டாரு" - தங்கைக்காக மைத்துனரை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்.! 



iN Chennai RK Nagar Auto Driver Killed 

தங்கை மீது வைத்த அளவுகடந்த பாசம் காரணமாக, மைத்துனரை கொலை செய்து, தங்கையின் தாலியறுக்க காரணமாக இருந்த சகோதரரின் பந்தம் பதறவைத்துள்ளது.

சென்னையில் உள்ள ஆர்.கே நகர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் அஜய் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அஜயின் மனைவி பிரியா. 

மனைவி மீது தாக்குதல்

தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகும் நிலையில், சம்பவத்தன்று மனைவியை ஆட்டோ ஓட்டுநர் அஜய் ஆத்திரத்தில் தாக்கியதாக தெரியவருகிறது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; ஞானசேகரனிடம் விடிய-விடிய விசாரணை.!

தங்கை பாசம்

இதனால் வேதனையடைந்த பிரியா, தனது அண்ணன் அன்பு செல்வத்திற்கு தொடர்பு கொண்டு அழுதபடி பேசி இருக்கிறார். தங்கை கண்ணீருடன் தளர்ந்த குரலில் பேசியதால் ஆத்திரமடைந்த அன்பு, கத்தியுடன் தங்கையின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். 

chennai

மச்சான் கொலை

அங்கு வீட்டில் தனியாக இருந்த மைத்துனரிடம் தங்கையை தாக்கியது தொடர்பாக வாக்குவாதம் செய்தவர், ஒருகட்டத்தில் அஜயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். 

தற்போது தலைமறைவான அன்புசெல்வத்திற்கு காவல்துறையினர் வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னை: விஜிபி தீம் பார்க்கில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பணியாளருக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!