ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
#Breaking: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை; இன்று கிடுகிடு உயர்வு., நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இதையும் படிங்க: "எரிச்சி கொன்னுட்டோம்" - 7 ஆண்டுகளாக மாயமானவர் வழக்கில் பகீர் திருப்பம்; பரபரப்பை வைக்கும் தகவல்.!
இன்று தங்கம் விலை
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 480 உயர்ந்து, ரூபாய் 59 ஆயிரத்து 600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 60 உயர்ந்து, ரூபாய் 7450 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 1,04,000 ரூபாய் க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையைவிட ரூ.1000 உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்த ரௌடியை தீர்த்துக்கட்டிய 6 பேர் கும்பல்; சென்னையில் பயங்கரம்.!