53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வேளச்சேரி: நூலிழையில் விபத்தில் தப்பித்து வலிப்பில் பறிபோன உயிர்.. சாலை பள்ளத்தில் காத்திருந்த எமன்.!
இருசக்கர வாகனத்தில் பொறுமையாக சென்றவர், விபத்தில் இருந்து தப்பித்தபோதிலும் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இன்று வேளச்சேரியில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில் சோகம்.!
சாலையோரம் பொறுமையாக அவர் பயணித்த நிலையில், குறுக்கே பள்ளம் ஒன்று இருப்பதை கவனித்துள்ளார். இதனையடுத்து, அவர் தனது வாகனத்தின் வேகத்தை குறைத்து பள்ளத்தை கடக்க முயற்சித்துள்ளார்.
அச்சமயம் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வேறொரு வாகன ஓட்டி, முன்னால் சென்று கொண்டு இருந்த முருகேசனின் வாகனம் மீது லேசாக மோதினார். இதனால் நிலைதடுமாறி முருகேசன் வாகனத்தில் இருந்து சாலையின் வலப்புறம் விழுந்தார்.
விபத்தில் தப்பித்து வலிப்பில் பறிபோன உயிர்
அப்போது, வேறொரு மாநகர பேருந்து வந்த நிலையில், லேசாக முருகேசனின் மீது உரசியுள்ளது. பேருந்து மெதுவாக வந்ததால் உடனடியாக நிறுத்தப்பட்டு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது எனினும், கீழே விழுந்ததில் முருகேசன் படபடப்பை எதிர்கொண்டுள்ளார்.
இதனால் அவருக்கு நிகழ்விடத்தில் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். மேலும், அவசர ஊர்திக்கும் தகவலை தெரிவித்த நிலையில், மருத்துவ பணியாளர்கள் விரைந்து வந்து அவரை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளத்தில் விழுந்து வலிப்பு ஏற்பட்டு பலியான காட்சிகள்
#JUSTIN இருசக்கர வாகன ஓட்டி வந்த நபர் சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து மரணம்#velachery #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/jFNZytxHNq
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 9, 2024
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்; ஹெல்மட் அணியாததால் இரண்டு பேர் பலி.!