#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பூட்டிக்கிடக்கும் வீடுகள் டார்கெட்; தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?.!
தூத்துக்குடி பகுதியில் சம்பவத்தன்று காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மொய்தீன் என்பவர் தனது காரில் வந்த நிலையில், அவரை மடக்கி விசாரித்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டுள்ளார். இதனால் அவர் உடனடியாக காவல் நிலையம் அழியாது செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
10 காவல்நிலையங்களில் வழக்கு
கைதானவர் ரகமதுலாபுரம் பகுதியில் வசித்து வரும் மொய்தீன் என்பது தெரியவந்தது. இவரின் மீது திருச்சி, மதுரை, கோவை என பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களால் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவரின் வீட்டில் இருந்து தங்க நகைகள், வெள்ளிப்பொருட்களும் மீட்கப்பட்டன.
பூட்டிக்கிடக்கும் வீடுகள் டார்கெட்
விசாரணையில், இவர் பூட்டிக்கிடக்கும் வீடுகளை குறிவைத்து குற்றச்செயலில் ஈடுபட்டது அம்பலமானது. ஐடி நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் மொய்தீன், தற்போது வாகன தணிக்கையில் சிக்கி குற்றத்தை ஒப்புக்கொண்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 வயது சிறுவன்; அலட்சியத்தில் இருந்து மீண்டுவராத அதிகாரிகள்.!
இதையும் படிங்க: கரூர்: தமிழுக்கு வந்த பகீர் சோதனை: அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் வேதனை.!