ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
சீறிப்பாய்ந்த கார்.. டூவீலரில் சென்ற 2 பேருக்கு நேர்ந்த சோகம்.. வாணியம்பாடியில் துயரம்.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, திருமாஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் நண்பர் ராமன். சின்னத்தம்பி ஒளி,ஒளி பந்தல் அமைக்கும் பணியை செய்து வருகிறார்.
சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த ராமன், தற்போது விடுமுறையில் சொந்த ஊர் வந்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால், ராமனின் விடுமுறையின்போது, அவர் சின்னத்தம்பியுடன் பணிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உறவை தட்டிக்கேட்டதால் பயங்கரம்; கழுத்து, கைநரம்பு அறுத்து துடிதுடிக்க கொலை.!
இதனிடையே, சம்பவத்தன்று இவர்கள் நாட்றம்பள்ளி பகுதியில் பந்தல் அமைக்கும் பணிக்காக, தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
இருவரும் பலி
அப்போது, வழியில் வாணியம்பாடியை அடுத்துள்ள நெற்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில், பாலத்துக்கு அருகே இவர்கள் சென்றனர். அச்சமயம், இவர்களின் வாகனத்திற்கு பின்னால் வந்த கார், டூவீலர் மூத்த மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமன், நிகழ்விடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சின்னத்தம்பி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தி நிறுத்தாமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கொடூர கணவன்.!