சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கொடூர கணவன்.!

குடும்பத்தகராறில் மனைவி கொலை செய்யப்பட்ட பயங்கரம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன்கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 53). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ரமேஷின் இரண்டாவது மனைவி தீபா (வயது 35).
இதையும் படிங்க: ஆம்பூர்: 7 வயது சிறுமி பலாத்காரம்.. 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.!
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ரமேஷ், அவ்வப்போது மனைவியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று தீபா, தனது தந்தை வரலட்சுமியின் வீட்டிற்கு உறங்க சென்றுள்ளார்.
அச்சமயம் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்.
மனைவி கொலை
இந்த சம்பவத்தில் தீபா நிகழ்விடத்திலேயே அலறித்துடித்து உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த ரமேஷ் தப்பிச் சென்ற நிலையில், காவல்துறையினர் தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; 28 வயது இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கொள்ளை.!