#BigBreaking: காதலிக்க மறுத்த 23 வயது பெண்ணை கழுத்தறுத்து, 19 வயது இளைஞர் தற்கொலை.. திருப்பூரில் வீடுபுகுந்து பயங்கரம்.!



in-tiruppur-udumalai-19-year-old-boy-suicide-23-year-ol

உடுமலையில் இளம்பெண்ணை காதலித்து வந்த நபரினால் நடந்த பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சினேகா (வயது 23). இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் தீபக் (19) என்ற நபருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நட்பாக பழகி வந்த நிலையில், பெண்ணின் மீது தீபக் காதலை வளர்த்துக்கொண்டதாக தெரியவருகிறது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் சோகம்: பணத்தை இழந்த 25 வயது இளைஞர் தற்கொலை.!

இன்ஸ்டாகிராம் பழக்கம்

சம்பவத்தன்று திருவண்ணாமலையில் இருந்து உடுமலை சென்ற தீபக், சினேகாவின் வீட்டிற்கு சென்று தனது காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

suicide

இந்த விசயத்திற்கு சினேகா எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த தீபக் கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்து இருக்கிறார். மேலும், தன்னைத்தானே கழுத்தறுத்து தற்கொலை செய்துள்ளார்.

கொலை முயற்சி & தற்கொலை

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட தகவலின்படி சினேகா படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தீபக் தற்கொலை செய்து உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Erode: கந்துவட்டி கடன் குடும்பத்தையே கதைமுடித்த பயங்கரம்.. மோசடி செயல்களால் நடந்த பெருந்துயரம்.!