திடீரென முறிந்து விழுந்த ஆலமரம்; 60 வயது நபரின் உயிரை காவு வாங்கிய எமன்.. கடலூரில் சோகம்.!



in Virudhachalam Man Dies Tree Fallen 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, நெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் விநாயகம் (வயது 60). இவர் கீரை வியாபாரியாக பணியாற்றி வருகிறார். 

நேற்று காலை சுமார் 05:45 மணியவில், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில், கோ. பூவனூர் பகுதியில், பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்று கொண்டு இருந்தார்.

virudhachalam

ஆலமரம் முறிந்து விழுந்து பலி

அப்போது, நூற்றாண்டு பழமையான ஆலமரம் ஒன்று, திடீரென முறிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மரத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட விநாயகம், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி கர்ப்பம்; திருமணமான 26 வயது நபரின் அதிர்ச்சி செயல்.. போக்ஸோவில் உள்ளே வைத்த காவல்துறை.!

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் மரக்கிளையை அகற்றி விநாயகத்தின் உடலை மீட்டனர். 

பின் காவல்துறையினர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 

இதையும் படிங்க: சென்னை: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த விவகாரம்; படுகாயமடைந்தவர் பரிதாப பலி.!