பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணனின் உதவியாளர் வீட்டில் திடீர் ஐடி ரெய்டு.! சிக்கிய பணமும், முக்கிய ஆவணங்களும்.!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் நடத்திவரும் ரெய்டு தாக்குதலால், மிரண்டுகிடக்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளருமான அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் அண்ணனின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரருடைய உதவியாளர் வீட்டில் நீண்ட நேரமாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது. அதில் 50 லட்சம் ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார். இவருக்கு சொந்தமான கல்லூரி இலுப்பூரில் உள்ளது. அதில், விராலிமலையைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.
ரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வீட்டிற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், நள்ளிரவு 2 மணி வரை சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.