நகைக்கடன் தள்ளுபடி... மீண்டும் ஒரு வாய்ப்பு.! கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு.!



Jewelry loan discount

குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்கள் மீண்டும் சரியான விவரங்களை அளித்த பின்னர் அவை மீண்டும் சரிபார்க்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நகை கடன் தள்ளுபடி கிடைக்காதது போல செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தம் 10.18 லட்ச நகைக்கடன்களே(50 சதவீதம்) தள்ளுபடிக்கு தகுதியானவை. மேலும், 48.84 லட்ச நகைக்கடன்களில், 7.65 லட்ச கடன்கள் 40 கிராமிற்கு மேலானவை ஆகும். 21.63 லட்ச நகைக்கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்களால் 40 கிராமிற்கு மேல் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.20 லட்ச கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளன. இதன் மூலம், 15.2 லட்ச கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன. 22 லட்சத்து 52 ஆயிரத்து 226 கடன்தாரர்களில் தற்போது 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேரின் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை என தெரிவித்துள்ளார்.