#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெயலலிதா 73-வது பிறந்தநாள்.!அரசியல் ஆட்டத்தை இன்றுமுதல் துவங்குவாரா சசிகலா.?
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த மாதம் விடுதலையாகி சென்னை வாங்க சசிகலா அவரர்களுக்கு, பெங்களுருவில் இருந்து வழி நெடுகிலும், அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். தற்போது சென்னை தியாகராய நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் அவர் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வந்த சசிகலாவை அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வருவார்கள் என அதிமுக, அமமுக இரு வட்டாரங்களிலும் கூறப்படுகிறது. இன்று பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள். எனவே ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா தனது அரசியல் பிரவேசத்தை இன்று முதல் துவங்குவாரா? என அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இன்று ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், ஒருங்கிணைப்பாளரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அதேபோல், சசிகலா இன்று ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவார். அது சசிகலாவுடன் தொடர்புடைய ஏதாவது ஒரு இல்லத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.