மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரை அருகே கபடி வீரர் மர்மமான முறையில் கொலை.. போலீசார் தீவிர விசாரணை.!
மதுரை அருகே உள்ள கூலிப்பட்டியில் திருப்பதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 27 வயதான சத்தியமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். கபடி வீரர்கள் சத்தியமூர்த்தி சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த சத்தியமூர்த்தி தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம், கபடி போட்டிகளை பார்வையிட்டுள்ளார். மேலும் சில கபடி போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாடி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி வீட்டிற்கு பின்புறம் கட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக விட்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர சரணை நடத்தி வந்த நிலையில், கோவில்பட்டியை சேர்ந்த சிவா, திருப்பதி ஆகிய 2 பேர் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி கொலை தொடர்பாக சரணடைந்துள்ளனர்.