கஜா புயல் எதிரொலி: 10,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.!



kaja-cyclone---employement-service---thanjavur

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 09.02.2019 , சனிக்கிழமை,  நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை.

இடம்: மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, தஞ்சாவூர். புதிய பேருந்து நிலையம் அருகில்.

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, BE, MBA, ஆசிரியர்கள், செவிலியர், பார்மஸிட் படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Kaja cyclone

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பிற்காக சிறப்பு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

மேற்காணும் கல்வித் தகுதியுடன் 18 முதல் 35 வயது உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது சுய விவரங்களுடன் அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.