டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டு விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைத்த தினம் இன்று!



kaja cyclone crossed one year

கடந்த ஆண்டு 15.11.2018ல் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் "கஜா" புயல் என்னும் கோர புயலால் அப்பகுதிகள் முழுவதும் சேதமடைந்தது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 1வருடம் நிறைவடைந்தது.

அந்த கோரப்புயலால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள மரங்கள், விவசாயப் பயிர்கள், வீடுகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் என அனைத்தும் கீழே சாய்ந்தன.

Kaja cyclone

 இந்த புயலானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவு தொடங்கி 16ம் தேதி காலை வரை உச்சக்கட்டத்திற்கு சென்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள், விசைப்படகுகள், வீடுகள் என்று எல்லாவற்றையும் சூறையாடிச்சென்றது. 

கஜா புயல் கோர தாண்டவம் ஆடி 1 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இன்று வரை அப்பகுதி மக்கள் மீளமுடியாத துயரத்தில் தான் இருக்கின்றனர். டெல்டா மாவட்டம் என்றாலே செழிப்பாக தான் இருக்கும். ஆனால் இந்த கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் நிலைகுலைந்து உள்ளன .