மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழ்வை இழந்து வாடும் மக்களுக்கு ஆறுதல் அளித்த இளைஞர்கள்! மக்கள் ஆறுதல்
கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சோகத்தில் மூழ்கி கிடக்கிறது தென்தமிழகம். குறிப்பாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குளாகியுள்ளது. ஊருக்கே உணவு கொடுத்த விவசாயி இன்று உன்ன உணவில்லாமல், அருந்த நீர் இல்லாமல் தவித்து வருகின்றான்.
சென்னையில் ஒவ்வொரு முறை புயல், கனமழை தாக்கியபோதும் சென்னை வாசிகளுக்காக ஒடி ஒடி உதவி செய்த கிராமங்கள் இன்று மின்சாரமின்றி, அருந்த நீரின்றி தவித்து வருகின்றனர். பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது. சில கிராமங்களை இன்றுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. கஜா ஏற்படுத்திய பாதிப்பையும், சோகத்தையும் ஒரு கட்டூரையில் விலக்கிவிட முடியாது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் கிராமங்கள் என்பதால் நிச்சயம் சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தலையாய பிரச்சனையாக இருப்பது தண்ணீர்தான். பாதிக்கப்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் நீரின்றி தவிக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீழப்பட்டி ராசியமங்கள் என்னும் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தண்ணீர் கிடைக்காய் செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளார்கள் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள்.பாதிக்கப்பட்ட தங்களது சொந்த கிராமத்து மக்களை காப்பாற்றும் விதத்தில் சென்னையில் வேலை செய்யும் சில இளைஞர்களும், வெளிநாடுகளில் வேலை செய்யும்
அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நிதி திரட்டி தங்களது சொந்த கிராம மக்களுக்குகாக புதிய ஜெனரேட்டர் ஒன்றை வாங்கி அதன் மூலம் கிராமத்திற்கு நீர் வரவழைத்துள்ளனர். தங்கள் கிராமத்து இளைஞர்களின் இந்த முயற்சியை கண்டு மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர் கிராமத்து மக்கள் .
பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நம்மால் என்ன செய்யமுடியும் என்று எண்ணாமல், நம்மாலும் இதை சரிசெய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் கீழப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்த இளைஞர்கள். இந்த செய்தியை படிக்கும் நீங்களும் நிச்சயம் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு கிராமத்தை சேர்ந்தவராக கூட இருக்கலாம். மற்றவர்கள் நமக்கு எப்போ உதவி
செய்வார்கள் என்று எண்ணாமல் நீங்களும் உங்களால் முடிந்தவரை உங்கள் கிராம மக்களுக்கு உதவுங்கள். நன்றி!