மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டா இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீடுகள் உறுதி; துணை முதல்வர் அறிவிப்பு.!
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா இருந்தாலும் இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களை சூரையாடி கோரத்தாண்டவம் ஆடியது கஜா புயல். அதை பலரும் இன்று மறந்து இருக்கலாம் ஆனால் அரசு அறிவித்த முன்னறிவிப்பை விடவும் பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தி மக்களின் வீடுகள், உடைமைகள், நிலபுலன்களில் உள்ள பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால் அந்த பாதிப்பை இன்றும் மறக்க முடியாத நிலையில் உள்ள மக்கள் தற்போதுதான் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். இன்னும் திரும்பாத கிராமங்கள் பல உள்ளன.
இந்நிலையில் புயல் பாதிப்பை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டனர். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று கஜா புயல் நிவாரணமாக 15000 கோடி இழப்பீடாக மத்திய அரசிடம் கேட்டு வலியுறுத்தி வந்தார்.
அதன் பிறகு தமிழகம் வந்து புயல் பாதிப்புகளை மூன்று நாட்கள் பார்வையிட்ட மத்திய குழுவினர் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து தற்சமயம் இரண்டாவது கட்டமாக ரூபாய் 353 கோடியை இழப்பீடாக வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று கஜா புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரணங்கள் குறித்து விளக்கம் அளித்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பட்டா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் அரசால் கட்டித்தரப்படும். பட்டா இருந்தால் அவர்கள் வசித்த இடத்திலேயே வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.