#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாதி மதமற்ற சினேகாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்.! என்ன கூறியுள்ளார் தெரியுமா?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிநேகா. வழக்கறிஞரான இவர் இளம் வயதிலேயே சாதி மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர். இவர் பார்த்திப ராஜா என்பவரை சமய சடங்குகள் இல்லாமல், திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் சினேகா சாதி மற்றும் மதம் அற்றவர் என்ற பெயரில் சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
பின்னர் நீண்டபோராட்டதிற்கு பிறகு சிநேகாவுக்கு, "சாதி மற்றும் மதம் அற்றவர்" என்ற சான்றிதழை திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி வழங்கினார்.
குறித்து சினேகா கூறுகையில், ‘என்னை பள்ளியில் சேர்க்கும் போதே என்னுடைய பெற்றோர்கள் எந்த ஜாதியும் இல்லை என்று கூறியே சேர்த்தார்கள். முதலில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பள்ளி நிர்வாகம், பின்னர் சேர்த்துக் கொண்டார்கள். இதையடுத்து கல்லூரி வரையில் சாதி இல்லாமலே படித்தேன்.
மேலும் என்னுடைய உடன்பிறப்புகளான மும்தாஜ் மற்றும் ஜெனிஃபரும் அவ்வாறே படித்தனர்.இந்நிலையில் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு மனு அளித்தேன். தற்போது பல போராட்டங்களுக்குப் பிறகு ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளது’. என்று கூறினார்.
இந்நிலையில் சிநேகாவிற்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே! pic.twitter.com/w1a22F2GRh
— Kamal Haasan (@ikamalhaasan) 13 February 2019