திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாணவர்களுக்கு.. இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..! காரணம் இதுதான்..!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை பட்டாசு ஆலை நேற்று வெடித்து சிதறி 9-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த விஷயம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் நாகேந்திரன் உட்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவிலுக்காக அதிக வெடிமருந்துள்ள பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை வனத்தோட்ட பகுதியில் இருக்கும் 2 ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விபத்தில் 9 பேர் உயிரிழந்த காரணத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.