மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலை அறிந்த தந்தை கொடூர கொலை; பாசக்கார மகளின் பதறவைக்கும் சம்பவம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவர் சுரேஷ் பாபு (வயது 40). இவருக்கும், ஆர்த்தி என்ற (வயது 21) இளம்பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த தகவல் ஆர்த்தியின் தந்தைக்கு தெரியவரவே, அவர் மகளை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி, தனது கள்ளக்காதலன் சுரேஷ் பாபுவுடன் சேர்ந்து தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்
பின் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க மதுபோதையில் தந்தை உயிரிழந்ததாக கூறி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, தந்தையை கொலை செய்து நாடகமாடிய ஆர்த்தி, அவரின் கள்ளக்காதலன் சுரேஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.