ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உடன்பயிலும் மாணவருக்கு குளிர்பானத்தில் ஆசிட் ஊற்றி கொடுத்த சிறுவன்.. 2 கிட்னியும் செயலிழந்ததால் சோகம்.! கண்ணீரில் பெற்றோர்.!
தன்னுடன் பள்ளியில் படித்து வரும் மாணவனுக்கு மற்றொரு மாணவன் ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுக்க, சிறுவன் 2 கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் சோகம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மல் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவரின் 11 வயது மகன், அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24 ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டிற்கு திரும்பிய போது, பள்ளியில் உடன் பயின்ற சிறுவன் சுனிலுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளான். இந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் சிறிது நேரத்திற்குள்ளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட, அதிர்ந்துபோன பெற்றோர் மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
பின்னர், சிறுவன் மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வாயில் புண்கள் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்கு கேரளாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து உறுதியாகவே, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறுவனின் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.