விவசாயிநா இளக்காரமா?.. ஷோ ரூம் பணியாளர்களை கதறவைத்த மாஸ் சம்பவம்.! அரைமணிநேரத்தில் அல்லுவிட்ட பரபரப்பு.!!



Karnataka Tumakuru Showroom Employees tease Farmer Finally Got Revenge Karma

நட்புக்காக திரைப்பட பாணியில் சரக்கு வாகனம் வாங்க சென்ற விவசாயியை ஷோ ரூம் பணியாளர்கள் அவமதிக்க, அரைமணிநேரத்தில் விவசாயி செய்த மாஸ் சம்பவத்தால் தார்மீக மன்னிப்பு கேட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், ராமனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் கெம்பே கவுடா. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் துமகூரு நகரில் உள்ள கார் ஷோரூமுக்கு சென்ற கெம்பே கவுடா, விவசாய நிலத்தில் இருந்த உடையுடன் சென்றுள்ளார். ஷோ ரூம் ஊழியர்களிடம் விவசாய பொருட்களை எடுத்து செல்ல சரக்கு வாகனம் வாங்க வேண்டும் என்று கவுடா கூறியுள்ளார். 

அப்போது, அங்கிருந்த பணியாளர்கள் சிரித்தபடி, உங்களிடம் 10 ரூபாய் உள்ளதா? சரக்கு வாகனம் உங்களுக்கு வேண்டுமா? என்று கலாய்த்து இருக்கின்றனர். நான் உண்மையில் சரக்கு வாகனம் வாங்க வந்திருக்கிறேன் என்று கெம்பே கவுடா கூறவே, ஷோ ரூம் ஊழியர்கள் அரைமணிநேரத்தில் ரூ.10 இலட்சம் கொடுத்தால் சரக்கு வாகனம் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

சவாலை ஏற்றுக்கொண்ட கெம்பே கவுடா, கிராமத்தில் இருக்கும் மாமாவுக்கு தொடர்பு கொண்டு பணத்தை எடுத்துவர சொல்லியுள்ளார். அவரும் பணத்தை எடுத்து வந்த நிலையில், ஷோ ஊழியர்கள் முன்னிலையில் பணம் வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன ஷோ ரூம் பணியாளர்கள், பல காரணம் கூறி சரக்கு வாகனம் டெலிவரி செய்ய 2 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.

karnataka

இதற்கு மறுப்பு தெரிவித்த கெம்பே கவுடா ஷோ ரூம் முன்னிலையில் போராட்டம் செய்யவே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திலக்பார்க் காவல் துறையினர் கெம்பே கவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஷோ ரூம் பணியாளர்கள் தார்மீக மன்னிப்பு கேட்டதும் கெம்பே கவுடா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

நடிகர் விஜயகுமார் மற்றும் சரத் குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான நட்புக்காக திரைப்படத்தில், கோயம்புத்தூரில் இருந்து கார் வாங்க மூடை மூடையாக பணத்தை எடுத்து செல்லும் காட்சிகள் இருக்கும். அதனைப்போல இந்த சம்பவம் நடந்துள்ளது. விவசாயி என்றாலே இளக்காரமா?..