மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் கூட வந்திரு தங்கம்.. மகளின் காலில் விழுந்து கதறிய பெற்றோர்.. அவன் தான் வேணும், போங்க..!
19 வயது இளம் பெண்ணிடம் பெற்றோர்கள் காதலனிடம் இருந்து பிரிந்து வர கூறி காலில் விழுந்து கதறியும் கெஞ்சியும் கேட்காமல், மகள் ஒரே முடிவாக காதலனுடன் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் வெங்கட்ராஜ். இவரது 19 வயது மகள் தனலட்சுமி. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் படிக்க தயாராக இருந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி முதல் தனலட்சுமி மாயமான நிலையில், அவரை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை வெங்கட்ராஜ் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள இ. புதுக்கோட்டையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பெரியகுளம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலின் அடிப்படையில் பெரியகுளம் காவல்துறையினர் தனலட்சுமி இருந்த இடத்திற்கு சென்று விசாரித்துள்ளனர்.
அதன்போது, தனலட்சுமியுடன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 24 வயது மாதேஸ்வரன் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெரியகுளம் வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், தனலட்சுமியின் பெற்றோர் மற்றும் கரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கரூரிலிருந்து 2 காவலர்களுடன் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு வந்த தனலட்சுமியின் பெற்றோர், தங்களது மகளை கையெடுத்து கும்பிட்டு, காலில் விழுந்தும் கண்ணீரும் கம்பலையுமாக கதறியும், தனலட்சுமி பெற்றோருடன் வர மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், 19 வருடங்கள் மகள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, பாசம் காட்டி அன்புடன் வளர்த்து வந்த தாயும் - தந்தையும் பிச்சை எடுப்பதுபோல மகளிடம் மன்றாடிய நிலையில், தனலட்சுமியின் முடிவில் மாற்றம் இல்லை.
மேலும், எனக்கு நீங்கள் தேவை இல்லை. உங்களின் சொத்தும், சுகமும் எனக்கு வேண்டாம். அவனே எனக்கு போதும். நான் அவனோடு தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறியுள்ளார். பெற்றோர்கள் பேசியும் தனலட்சுமி வழிக்கு வராததால், காவல்துறையினர் காதலன் மாதேஸ்வரன் - தனலட்சுமியை அனுப்பி வைத்தார். பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பினர்.
19 வருடங்களுக்கு முன்னர் தனலட்சுமியின் பெற்றோருக்கு திருமணம் முடிந்த தருணத்தில், தனது குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என தம்பதி இருவரும் தெய்வத்திடம் மடியேந்தி பிச்சை கேட்டிருப்பார்கள். இன்று அந்த குழந்தை ஆளாகி வளர்ந்து, பெற்றோரை கதற வைத்துள்ளது. தமிழ் சினிமாவின் தரம்கெட்ட மோகத்தினாலேயே இப்படியான துயரம் நடப்பதாக பெண்ணுடன் வந்தவர்கள் புலம்பி சென்றனர்.