"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
51 வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் பெண்; வறுமையால் படிப்பை விட்டவரின் மறுமுயற்சி.!
கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகிலா பானு (வயது 51). இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு, குடும்ப சூழ்நிலையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
பின் சாகுல் ஹமீது என்பவருடன் திருமணம் ஆகி குழந்தையும் பெற்றார். சத்துணவு சமையலராக பணியாற்றி வரும் ராகிலா, அமைப்பாளர் வேலைக்கு தேர்வாகும் முயற்சியில் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதினார்.
இந்த தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சியும் பெற்றார். தோல்வி அடைந்த மீதமுள்ள பாடங்களை விரைவில் துணை தேர்வு எழுத இருக்கிறார். இது குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகிய நிலையில், பலருக்கும் படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது.
ராகிலாவின் முயற்சி படிக்க இயலாமல் போன அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும். விரைவில் அனைவரும் படித்து தேர்வு எழுதுவர் என்று கூறி பாராட்டி வருகின்றனர்.