மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலுக்கு சென்ற பெண் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு; பூசாரி மீது சந்தேகம்.. கரூரில் உறவினர்கள் கண்ணீர்.!
கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்மணி, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சாமி கும்பிட சென்றுள்ளார்.
சாமி கும்பிட சென்ற பெண்மணி மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில், குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலன் இல்லை. அவர் மாயமானது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே, பெண்மணியின் இருசக்கர வாகனம் கோவிலுக்கு அருகே நிறுத்தப்பட்டவாறு இருந்த நிலையில், கோவிலுக்கு அருகேயுள்ள விவசாய கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த உறவினர்கள், பெண்ணின் உடலை பார்த்து கதறியழுத்தனர். சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகளிடம், பெண்ணின் உறவினர்கள் உடலை கைப்பற்றவிடாமல் போராட்டம் நடத்தினர்.
மேலும், கோவில் பூசாரியின் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கவே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரேத பரிசோதனையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து, பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த தனலட்சுமி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.