96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கோவை: பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய எஸ். ஐ... துணை கமிஷனர் அதிரடி உத்தரவு!!
கோவையில் பிரேத பரிசோதனை செய்வதற்கு இறந்தவரின் குடும்பத்தினரிடம் லஞ்சம் வாங்கியதற்காக போலீஸ் சிறப்பு எஸ். ஐ அருளானந்தம் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் அருளானந்தம். இவர், இரண்டு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த மரணம் தொடர்பான வழக்கை விசாரித்தார். அப்போது இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு இறந்தவரின் குடும்பத்தினரிடம்
தனக்கு, 2,000 ரூபாயும், மார்ச்சுவரி ஊழியர்களுக்கு, 4,000 ரூபாயும் அருளானந்தம் லஞ்சம் வாங்கியுள்ளார்.
அருளானந்தம் லஞ்சம் வாங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்(தெற்கு) சிலம்பரசன் விசாரணை நடத்தினார். அதில் சிறப்பு எஸ்.ஐ. அருளானந்தம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அதனையடுத்து துணை கமிஷனர் அருளானந்தை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.