கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடித்து 9 பேர் பலியான விவகாரம்; பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்.. இழப்பீடு அறிவிப்பு.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில், அதன் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு குடோனும் தீ விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிய நிலையில், 9 பேர் பரிதாபமாக பலியாகினர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்து இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், மாநில அரசின் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 இலட்சம் இழப்பீடு, காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதனைப்போல, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை பதிவு செய்து மத்திய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பட்டாசு ஆளை விபத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள். இந்த செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்" என தெரிவித்தார்.