மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"காதல் திருமணம் செஞ்சிக்கிட்டோம், பாதுகாப்பு கொடுங்க சார்" - தர்மபுரி எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பரப்பட்டி, சொரக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரின் மகன் கோவிந்தசாமி. பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார்.
அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் ஐஸ்வர்யா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த 22ம் தேதி பெங்களூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்கப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர். இதனிடையே ஐஸ்வர்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர்.
காதல் ஜோடிக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்ற எண்ணத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் புகுந்தது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.