தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதிரடி தள்ளுபடியில் புண்ணாக்கு; விவசாயிக்கு குவிந்து வரும் பாராட்டு.!
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு 50% தள்ளுபடியில் புண்ணாக்கு விற்பனை செய்துவரும் மதுரை விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழக இளைஞர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து நடத்திய மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இந்த நாடு நிச்சயம் மறக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் பொங்கல் வருவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
ஒவொரு வருடமும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது ஒன்றும் அத்தனை சுலபமில்லை. ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பே அதற்கென சத்தான உணவுகள், ஆகாரங்களை கொடுத்து கொடுத்து கவனிக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான ஏழை விவசாயிகளால், காளைகளுக்காக அவ்வளவு தொகையை செலவிட முடிவதில்லை. மதுரையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ஜல்லிக்கட்டு காளைகளுக்காக, 50% தள்ளுபடியில் புண்ணாக்கு வழங்கி வருகிறார். காளை வளர்க்கும் விவசாயிகள் இந்த ஆஃபரை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் புண்ணாக்கு வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு தயார் செய்வதற்கு தேவையான சத்துணவுகள் போக குறைந்தது 5 கிலோ புண்ணாக்கு தேவைப்படும். என்னுடைய எண்ணெய் ஆலை இருக்கும், தனக்கன்குளம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். அதேபோல் இந்தாண்டு முதன்முதலாக ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரமும் அருகில் தான் இருக்கிறது. இதனால் காளை வளர்க்கும் விவசாயிகள் இந்த ஆஃபரை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் புண்ணாக்கு வாங்கி செல்கின்றனர்.
கிலோவுக்கு 50 ரூபாய்க்கு விற்கும் கடலைப்பிண்ணாக்கு, இங்கு வெறும் ரூ.25 தான். அதேபோல், தேங்காய் மற்றும் எள்ளுப்பிண்ணாக்கு, கிலோவுக்கு 25 மற்றும் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10 நாட்களுக்கு முன்பாக பாண்டிதுரை இந்த ஆஃபரை வெளியிட்டுள்ளார். மேலும் காளை உரிமையாளர்களைஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் இவர் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் இவர் செய்து வருகிறார்.